முடிவடைந்த தேர்தல் - சீல் மோடில் இருக்கும் அமைச்சர்கள்
மக்களவை தேர்தல் தமிழகத்தில் முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் தேர்தல் விதிகள் அமலில் உள்ளது. வரும் ஜூன் 4-ஆம் தேதி தான் வாக்குகள் எண்ணும் பணி நடைபெறும் என்பதால், அது வரையில் தமிழகத்தில் தேர்தல் விதிகள் அமலில் தான் இருக்கும்.
இதன் காரணமாக, அரசியல் நிகழ்ச்சிகள், கூட்டங்கள் போன்றவற்றை நடத்த அனுமதி இல்லாத காரணத்தால், தலைவர்கள் சில் மோடில் இருக்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கொடைக்கானல் ட்ரிப் மேற்கொண்டார். ஏப்ரல் 29-ஆம் தேதி சென்றவர் மே 3-ஆம் தேதி சென்னை திரும்பினார்.
அதே போல, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குடும்பத்தினருடன் லண்டன் ட்ரிப் சென்று 10-ஆம் தேதி சென்னை திரும்பியதாக கூறப்படுகிறது.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், டென்மார்க், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு சுற்றலா சென்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சுற்றுலாவின் ஒரு பகுதியாக அவர் அங்குள்ள கல்வி தரத்தை குறித்து ஆராய்ந்தும், அதிகாரிகளை சந்தித்து பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
பன்னாடுகளின் பள்ளிகளில் உள்ள நவீன கற்பித்தல் முறையை நேரடியாக பார்வையிட்டு வருகின்றோம்.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) May 25, 2024
அவ்வகையில் நார்வே நாட்டில் சேவையாற்றும் பள்ளியின் வகுப்பறை, ஆய்வகங்களைப் பார்வையிட்டு, அம்மாணவச் செல்வங்களோடு வகுப்பறையில் அமர்ந்து கற்பித்தல் முறையை உள்வாங்கினோம்.
நம்மை பற்றி… pic.twitter.com/9jt31XH5Xr
அதே போல நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, தியாகராஜன் எம்எல்ஏ மற்றும் திருச்சி மேயர் மு.அன்பழகன் ஆகியோருடன் சிங்கப்பூர் சுற்றுலா சென்று திரும்பியிருக்கிறார்.
பெரும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளக்கொள்ள சிறிய சிறிய சுற்றலாக்களை மேற்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில தினங்களில் தேர்தல் முடிவுகள் இருப்பதால், மீண்டும் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.