கொளுத்தும் வெயில்; வெளியே போறீங்களா? கண்டிப்பா இதை நோட் பண்ணுங்க!
இன்று வெப்பம் உச்சத்தை தொடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கோடை வெயில்
தமிழ்நாட்டில் கோடை வெயில் உச்சத்தை தொட்டது. நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த வருடம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது.
கவனம் தேவை
இதனைத் தொடர்ந்து, இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வெப்பம் அதிகமாக இருந்தது.
இன்றும் அதைவிட அதிக வெப்பநிலையுடன் மீனம்பாக்கம் இருக்க வாய்ப்பு உள்ளது. புறநகர்ப் பகுதிகளில் 40 C ஐ தொட கூட வாய்ப்பு உள்ளது.
ஆனால், கத்ரி வெயில் இன்னும் தொடங்காதது குறிப்பிடத்தக்கது.
சென்னை, மதுரை, வேலூர், தஞ்சை, திருச்சி, நெல்லை, நாமக்கல்லில் முதல் கட்டமாக வெயில் உச்சத்தை தொட்டுள்ளது.