அரசு விரைவு பேருந்து டிக்கெட் கட்டணம் உயர்வு? பயணிகள் அதிர்ச்சி!

Tamil nadu
By Sumathi Jan 19, 2024 01:15 PM GMT
Report

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து கட்டணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பேருந்து கட்டணம்

தொலைதூர பேருந்து சேவையில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் (SETC) முக்கிய பங்காற்றி வருகிறது. இதில் ஏசி சீட்டர், ஏசி ஸ்லீப்பர், ஏசி அல்லாத சீட்டர், ஏசி அல்லாத ஸ்லீப்பர் உள்ளிட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

setc bus ticket

இதில், பொங்கல் பண்டிகை முதல் அரசு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் 30 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்ததாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள SETC நிர்வாகம்,

பேருந்தில் அதிக கட்டணம் வசூலித்தால் complaint செய்யலாம் - தமிழக அரசு அறிவிப்பு

பேருந்தில் அதிக கட்டணம் வசூலித்தால் complaint செய்யலாம் - தமிழக அரசு அறிவிப்பு

 SETC நிர்வாகம் விளக்கம் 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகை முதல் அரசு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் 30 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்ததாக தகவல் வெளியானது.

அரசு விரைவு பேருந்து டிக்கெட் கட்டணம் உயர்வு? பயணிகள் அதிர்ச்சி! | Tamil Nadu Govt Setc Clarified About Bus Ticket

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள SETC நிர்வாகம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இனிமேல் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கான பயணக் கட்டணம் என்பது தமிழகம் முழுவதும் அனைத்து போக்குவரத்து கழகங்களில் ஒரே மாதிரியாக தான் இருக்கும்.

குழப்பம் எதுவும் இருக்காது. அரசு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் மாற்றி அமைக்கப்பட்ட கட்டணத்தை தான் கூடுதல் கட்டணம் என்று கூறி வருகின்றனர். எனவே யாரும் குழம்பிக் கொள்ள வேண்டாம். இந்த நடவடிக்கை உரிய முன்னறிவிப்புடன் தான் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.