தமிழகத்தில் பேருந்து கட்டணம் மீண்டும் உயருகிறதா? - போக்குவரத்துத்துறை அமைச்சர் பதில்
தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்த தற்போது வாய்ப்பில்லை என போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வந்த ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர் தற்போது போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்,
சென்னையில் இயக்கப்படும் 2000 அரசு பேருந்துகளில் பயணிகளின் முகங்கள் அறியும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்த தற்போது வாய்ப்பில்லை எனவும் புதிய பேருந்துகள் வாங்குவது தொடர்பாக ஜெர்மன் நாட்டு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
சமீக காலமாக எல்க்ட்ரிக் வாகனங்கள் தீப்பற்றி எரியும் சம்பவங்கள் அதிக அளவில் ஏற்படும் நிலையில் அது குறித்து பேசிய அமைச்சர்,
எலக்ட்ரிக் பைக்குகளால் ஏற்படும் தீ விபத்துக்கான காரணம் குறித்து அறிக்கை அளிக்க போக்குவரத்து ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தோடு வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டுவர அரசு ஆலோசனை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.