ரூ.6 ஆயிரம் டோக்கன் இன்று முதல்.. எங்கு, எப்படி வழங்கப்படும் - முக்கிய தகவல்!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டோக்கன் வழங்கப்படுவது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெள்ள பாதிப்பு
சென்னையில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படவுள்ளது.
டோக்கன் விவரம்
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 இலட்சத்திலிருந்து, 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை, ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கவுள்ளனர்.
இன்று முதல் டோக்கன் வழங்கப்படும். டோக்கன் எப்படி வழங்கப்படும் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. வீடு வீடாக மாநகரட்சி அதிகாரிகள் டோக்கன்களை வழங்குவார்கள். ரேஷன் கடை அடிப்படையில் டோக்கன் வழங்கப்படும். அதன்பின் 10 நாட்களுக்குள் நிவாரணத் தொகை வழங்கப்படும்.
டோக்கனில் எந்த தேதியில் ரேஷன் கடைக்கு வர வேண்டும் , எந்த நேரத்திற்கு வர வேண்டும், எந்த ரேஷன் கடைக்கு வர வேண்டும் என்பது போன்ற விவரங்கள் இருக்கும். கடையின் பெயர், குடும்ப அட்டைதாரர் பெயர் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.