வெள்ள நிவாரணம்; மத்திய அரசை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு - மு.க ஸ்டாலின் அறிவிப்பு!

M K Stalin Narendra Modi Government Of India
By Swetha Apr 03, 2024 05:04 AM GMT
Report

வெள்ள நிவாரணம் வழங்க கோரி மத்திய அரசை எதிர்த்து தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது.

வெள்ள நிவாரணம்

கடந்த வருடம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதீத கன மழை பெய்தது. இதனால், 4 மாவட்டங்களும் கடுமையான வெள்ளத்தில் பாதிக்கப்பட்டன.

வெள்ள நிவாரணம்; மத்திய அரசை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு - மு.க ஸ்டாலின் அறிவிப்பு! | Tamil Nadu Govt Case Against Central Govt

பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால், மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். அதே சமயத்தில், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களிலும் அதீத கனமழை பெய்து மக்களை நிலைகுலைய வைத்தது.

இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க கோரி தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது. இது குறித்து மிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.அதில், சுமார் 30,000 கோடிக்கு மேல் நிவாரணம் வழங்க கோரினார்.

வெள்ள நிவாரணம் - எந்தெந்த வட்டங்களுக்கும்..யாரு யாருக்கு வழங்கப்படும்..? வெளியான அரசாணை

வெள்ள நிவாரணம் - எந்தெந்த வட்டங்களுக்கும்..யாரு யாருக்கு வழங்கப்படும்..? வெளியான அரசாணை

நீதிமன்றத்தில் வழக்கு

ஆனால் அந்த நிவாரண தொகையை மத்திய அரசு வழங்கவில்லை. இந்த நிலையில், வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

வெள்ள நிவாரணம்; மத்திய அரசை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு - மு.க ஸ்டாலின் அறிவிப்பு! | Tamil Nadu Govt Case Against Central Govt

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரணமாக உரிய நிதியை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதியாக ஒரு பைசா கூட தரவில்லை என முதலமைச்சர் மு க ஸ்டாலின் மத்திய அரசின் மீது கடுமையாக குற்றம் சாட்டினார்.

மேலும், வெள்ள நிவாரணம் கேட்டு வழக்கு தொடரப்படும் என முதல்வர் நேற்று வேலூர் பிரசார கூட்டத்தில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.