குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும்? தமிழக ஆளுநர் பரபரப்பு புகார்!

Tamil nadu R. N. Ravi Social Media
By Swetha Jun 25, 2024 04:54 AM GMT
Report

குலதெய்வ வழிபாட்டுக்கு தடை என ஆளுநர் ஆர் என் ரவி கூறியதாக தகவல் பரவி வருகிறது.

தமிழக ஆளுநர் 

தமிழர்களைச் சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள் தான். சாராயச் சாவுக்கு அடிப்படைக் காரணமான குலதெய்வ, நாட்டார் தெய்வ, கிராமக் கோயில் திருவிழாக்களைத் தடை செய்ய வேண்டும். இவ்வாறு ஆளுநர் பேசியதாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும்? தமிழக ஆளுநர் பரபரப்பு புகார்! | Tamil Nadu Governor Rn Ravi Gives Police Complaint

இந்த தகவல் முற்றிலும் பொய் என்றும், போலியான தகவலை பரபரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அந்த காலத்தில் ஜாதி இல்லை பிராமணர் சூத்திரர் போன்ற பிரிவுகள் தான் இருந்தது - ஆளுநர் ஆர்.என்.ரவி

அந்த காலத்தில் ஜாதி இல்லை பிராமணர் சூத்திரர் போன்ற பிரிவுகள் தான் இருந்தது - ஆளுநர் ஆர்.என்.ரவி

பரபரப்பு புகார்

குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும். தமிழர்களைச் சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள்தான். சாராயச் சாவுக்கு அடிப்படைக் காரணமான குலதெய்வ, நாட்டார் தெய்வ, கிராமக் கோவில் திருவிழாக்களைத் தடை செய்ய வேண்டும்- ஆளுநர் ரவி என சில ஊடகங்கள் வாயிலாக செய்திகள் பகிரப்படுகின்றன.

குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும்? தமிழக ஆளுநர் பரபரப்பு புகார்! | Tamil Nadu Governor Rn Ravi Gives Police Complaint

இந்த விஷயத்தில், இதுபோன்ற செய்திகளை ஆளுநர் மாளிகை முற்றிலுமாக மறுப்பதோடு தவறான நோக்கத்துடன் பரப்பப்படும் போலி செய்திகளால் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தப் போலியான தகவலைப் பரப்பியவர்கள் பற்றி முழுமையாக விசாரணை,

நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் மாளிகை காவல்துறையில் புகார் அளித்துள்ளது. இந்த பிரச்சினையை உடனடியாக எங்களின் கவனத்துக்குக் கொண்டு வந்ததற்கு பொதுமக்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.