பொங்கல் பரிசு காத்திருக்கிறது.. வாரி வழங்கும் தமிழக அரசு - யாருக்கெல்லாம் தெரியுமா?
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் என்னவெல்லாம் வழங்கப்படும் என்று பார்க்கலாம்.
தமிழக அரசு
பொங்கல் திருநாள் தை மாதமன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தை முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையன்று தமிழகம் முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து,
வண்ண கோலமிட்டு, கரும்பு, மஞ்சள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை சூரியனுக்கு படைத்து பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடுவார்கள். இந்நிலையில் பொதுமக்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில்
1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.1000 ரொக்கம் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு , மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர்,
பொங்கல் பரிசு
சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்களை தவிர்த்து மற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை, மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் இது பற்றிய அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. அதேபோல் மகளிர் உரிமைத் தொகை ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஜனவரி மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாகவே,
அதாவது ஜனவரி 10ம் தேதியே வரவு வைக்கப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே அரசு வழங்கும் மகளிர் உரிமை தொகை ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000 என ஆகமொத்தம் ரூ. 2000 கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் உற்சாகமாக இருக்கின்றனர்.