ஸ்பேஸ் பே ஆக மாறும் 4 மாவட்டங்கள் - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு விண்வெளி கொள்கையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
டி.ஆர்.பி.ராஜா
நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தொழில் மற்றும் முதலீட்டு துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில், இது குறித்த அறிவிப்பை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டார்.
தமிழ்நாட்டை விண்வெளி தொழிலில் முன்னணி மாநிலமாக மேம்படுத்தவும், அதிகளவிலான முதலீடுகளை ஈர்க்கவும் விண்வெளி தொழில் கொள்கை (Space Tech Policy) வெளியிடப்படும் என கூறியிருந்தார். தற்போது தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விண்வெளிக் கொள்கை 2024 வெளியிட்டுள்ளது.
விண்வெளிக் கொள்கை
இதன் மூலமாக அடுத்த 10 வருடங்களில் 10ஆயிரம் பேருக்கு விண்வெளி துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே இலக்கு என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், புதிய மற்றும் விரிவாக்க தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க திட்டமிட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தை சுற்றியுள்ள மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை Space Bay ஆக ஊக்குவித்து, அந்த 4 மாவட்டங்களில் வளர்ச்சியை விரைவுபடுத்த நிறுவனங்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்கவும் முடிவு செய்துள்ளது.
விண்வெளிக் கொள்கை தொடர்பாக தொழில்துறையினர், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.