தமிழகத்தில் 69.46% வாக்குப்பதிவு; நள்ளிரவில் மாற்றம் - எந்த தொகுதி டாப் தெரியுமா?

Tamil nadu Lok Sabha Election 2024
By Sumathi Apr 20, 2024 02:41 AM GMT
Report

தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் 69.46% வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல்

தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் 72.09 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருப்பதாக அறிவித்த தேர்தல் கமிஷன், நள்ளிரவில் அதை 69.46 சதவீதம் என மாற்றி அறிவித்துள்ளது.

lok sabha election

தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் ஓட்டு பதிவு நடந்தது. காலை 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு, அமைதியான முறையில் நடந்து முடிந்தது. நாடு முழுவதும் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இனி.. பேருந்துகளில் இதற்கு அனுமதி இல்லை - தமிழக அரசு முக்கிய உத்தரவு!

இனி.. பேருந்துகளில் இதற்கு அனுமதி இல்லை - தமிழக அரசு முக்கிய உத்தரவு!

வாக்குப்பதிவு 

மொத்தம் 1,58,568 வாக்குபதிவு எந்திரங்களும் 81,157 கட்டுபாட்டு எந்திரங்களும் 8,685 VVPAT இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், வாக்குப்பதிவு நிறைவடைந்து இரவு 7:00 மணிக்கு 72:09 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்ததாக,

தமிழகத்தில் 69.46% வாக்குப்பதிவு; நள்ளிரவில் மாற்றம் - எந்த தொகுதி டாப் தெரியுமா? | Tamil Nadu Election Voting Count Details

தேர்தல் கமிஷன் அறிவித்த நிலையில், நள்ளிரவில் அதனை மாற்றி, 69.46 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவானதாக அறிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக, தர்மபுரியில் 81.48% ஓட்டுகள் பதிவாகி உள்ளது. மத்திய சென்னையில் குறைந்தபட்சமாக 53.91% ஓட்டுகள் பதிவாகிவுள்ளது.

புதுச்சேரி தொகுதியில் 78% ஓட்டுப்பதிவு நடந்துள்ளதாகவும், விளவங்கோடு இடைத்தேர்தலில் 65.40% ஓட்டுப்பதிவு நடந்துள்ளதாகவும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.