எடப்பாட்டிக்கும் அண்ணாமலைக்கும் தான் போட்டியே.. திமுக அவ்வளவுதான் - கவனிச்சீங்களா!
இரண்டாம் இடத்திற்கு மட்டுமே போட்டி நிலவுவதாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல்
தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பேசுகையில், அதிமுக - பாஜக பிரிந்து இருப்பதால் திமுக அணிக்கு களத்தில் போட்டியே இல்லை. 4- 5 தொகுதிகளில் கொஞ்சம் போட்டி இருக்கும்.
கோவை, தருமபுரி, ராமநாதபுரம் உள்ளிட்ட 5-6 தொகுதிகளில் போட்டி இருக்கிறது. மற்றபடி போட்டி இல்லை. எடப்பாடி பழனிசாமி செய்த காமெடியின் உச்சம் அவரை ஆளுமை என்று பிரபலப்படுத்துவதுதான். அவர் பெரிய ஆள்தான். 4 வருடம் ஆட்சி செய்தார். முக்கியமான பல திட்டங்களை கொண்டு வந்தார்.
2ம் இடத்திற்கு தான் போட்டி
2021ல் தேமுதிகவை கூட்டணியை விட்டு அனுப்பி விட்டார். தினகரன் கூட கூட்டணி வைத்த தேமுதிகவுக்கு 5 சீட் கொடுத்துள்ளார் எடப்பாடி. ராஜ்ய சபா வேறு கொடுப்பதாக கூறியுள்ளனர்.
அது எடப்பாடியின் வீழ்ச்சிதானே.
எடப்பாடிக்கும் அண்ணாமலைக்கு இடையில்தான் போட்டி. இரண்டாம் இடத்திற்கு மட்டுமே போட்டி. முதல் இடத்திற்கு போட்டியே இல்லை. முதல் இடம் திமுகவிற்குத்தான். அதில் மாற்றமே இல்லை எனத் தெரிவித்துள்ளார்.