தமிழ்நாடு அமைச்சரவையில் திடீர் பெரிய மாற்றம் - முக்கிய அறிவிப்பு!
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக அமைச்சரவை
திமுக அரசு பொறுப்பேற்று ஏற்கனவே மூன்று முறை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இன்று மாலை அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. 3 மூத்த அமைச்சர்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு புதியவர்களுக்கு பொருப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
எகிறும் எதிர்பார்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 27ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், அதற்கு முன்னதாக அமைச்சரவையில் மாற்றங்களை செய்ய விரும்பியதாக தெரிகிறது.
அதன் அடிப்படையில், உதயநிதி துணை முதலமைச்சாரவது, அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.