உரிமைகளை விட்டு கொடுத்து தமிழ்நாட்டை பாலைவனமாகும் திமுக அரசு - ஜெயக்குமார் ஆவேசம்
காவேரி விவகாரத்தில் தமிழக அரசு துரோகம் செய்துள்ளது என ஜெயக்குமார் பேசியுள்ளார்.
ஜெயக்குமார்
முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளான இன்று(15.07.2024) அவரது சிலைக்கு மாலை அணிவித்து பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இதில் அவர் பேசியதாவது, நம்முடைய ஜீவாதார உரிமைகளை விட்டுக்கொடுத்து அந்த வகையில் தமிழ்நாட்டை பாலைவனமாகும் முயற்சியில் திமுக அரசு உள்ளது.
அன்று கருணாநிதி தலைமையிலான திமுக அரசு சர்க்காரியா கமிஷனுக்கு பயந்து கர்நாடக அரசை அணைகளை கட்டிக்கொள்ள அனுமதித்தது. இந்த அணை கட்டப்படவில்லை என்றால் காவேரி விவகாரத்தில் பிரச்சனை இருக்காது. பிரச்சனை உருவானது திமுகவால் தான். ஆனால் பிரச்சனைக்கு தீர்வை உருவாக்கி கொடுத்தது அதிமுக தான்.
காவேரி நீர்
உச்சநீதிமன்றத்தில் காவேரி மேலாண்மை வாரியம் அமைய அதிமுக தான் முயற்சி எடுத்தது. உச்சநீதிமன்றமே உரிய நீரை அந்த காலக்கட்டத்தில் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு கூறியது. சோம்பேறித்தனமான தூங்குகின்ற அரசு தான் விடிய ஆளும் திமுக அரசு.
மாநில உரிமைகளை காப்பதற்காக சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் என்றாவது பேசி இருக்கிறார்களா? எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாமல் உச்சநீதிமன்றத்துக்கு செல்லாமல் டெல்டா மக்களுக்கு துரோகம் செய்துள்ளது திமுக அரசு. என்கவுன்ட்டர் செய்யப்பட்டவரை 5:30 க்கு அழைத்து செல்ல வேண்டிய அவசியம் என்ன? சரணடைந்தவன் ஏன் தப்பிக்க போறான். இந்த என்கவுன்ட்டரில் சந்தேகம் உள்ளது. என பேசியுள்ளார்.