போலாம் ரைட்..சிகாகோவில் முதலமைச்சரின் சைக்கிள் பயணம் - வைரலாகும் வீடியோ!

M K Stalin DMK Viral Video United States of America
By Vidhya Senthil Sep 04, 2024 03:29 AM GMT
Report

  அமெரிக்கா: சிகாகோவில் சைக்கிளில் பயணித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  மு.க.ஸ்டாலின்

உலக நாடுகளின் முன்னணி நிறுவனங்களைச் சந்தித்து சர்வதேச அளவில் தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடுகளைக் கொண்டுவரும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். சான் பிராசிஸ்கோ சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

mkstalin

பின்னர், சான் பிராசிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொண்டு பன்னாட்டுத் தொழில் நிறுவன உயர் அதிகாரிகள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது சுமார் 900 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

சான் பிராசிஸ்கோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த செயல் -வீடியோ வைரல்! இதை கவனிச்சீங்களா..

சான் பிராசிஸ்கோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த செயல் -வீடியோ வைரல்! இதை கவனிச்சீங்களா..

வைரலாகும் வீடியோ

இதனைதொடர்ந்து சிகாகோ சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடனம், சிலம்பம் என  பாரம்பரிய முறைப்படி  நடனமாடி  புலம்பெயர் தமிழர்கள் உற்சாக  வரவேற்பு   அளித்தனர் . தொடர்ந்து தமிழர்களுடன் சந்திப்பு என பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார்.

இதற்கிடையே சிகாகோவில் சைக்கிளில் பயணித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து முதல்வர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது : Evening’s calm sets the stage for new dreams என்று தெரிவித்துள்ளார். தற்பொழுது இந்த  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.