விஜய்யின் நாற்காலி திடீர் மாற்றம்... இதன் விலை எவ்வளவு தெரியுமா?
தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யின் நாற்காலி மாற்றம் செய்யப்பட்டுள்ளது தற்போது வைரலாக பேசப்படுகின்றது.
முதல்வர் விஜய்
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில் விஜய் முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
சில கூட்டணி கட்சிகளில் ஆதரவுடன் ஆட்சி அமைத்து தரமான செயல்களை செய்து வருகின்றது. தவெக அமைச்சர்களும் அனல்பறக்கும் வேலையினை செய்து வருகின்றனர்.
இதுவரை தமிழ்நாட்டில் கட்சி தலைவர்கள் என்றால் வேஷ்டி சட்டை என்று இருந்த நிலையில், அதனை மாற்றி கோட் சூட் என்று மாற்றியுள்ளார் விஜய்.
அதுமட்டுமின்றி பெரிய அரசியல் தலைவர்களின் நாற்காலியில் போடப்படும் வெள்ளை துண்டையும் விஜய் எடுக்கக் கூறியுள்ளார்.

அகற்றப்பட்ட நாற்காலி
இந்நிலையில் இதுவரை முதல்வர் அமரும் இருக்கை மரத்தால் செய்யப்பட்டதாக இருந்தது. ஆனால் தற்போதைய முதல்வர் விஜய் அதனை மாற்றியுள்ளார்.
இன்று மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். மணிகுமாரை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசியுள்ளார்.
முதல்வர் விஜய் தினமும் காலை அலுவலத்திற்கு வந்துவிட்டு மாலை தான் வீடு திரும்புகின்றார். ஆறு மணி நேரத்திற்கு மேலாக அமர்ந்து பணியாற்றும் நிலை உள்ளது.

இதனால் உடல் வசதியையும், முதுகு தண்டின் ஆரோக்கியத்தினையும் கருத்தில் கொண்டு இந்த இருக்கையானது சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறித்த இருக்கையின் விலை 55 ஆயிரத்திலிருந்து 80 ஆயிரம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.