முதலமைச்சருடன் செஸ் விளையாடிய பிரக்ஞானந்தா

Rameshbabu Praggnanandhaa C Joseph Vijay
By Manchu Jun 08, 2026 03:27 PM GMT
Report

நார்வேயில் நடைபெற்ற செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவை முதல்வர் விஜய் மற்றும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சாம்பியன் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் தொடரில் தமிழகத்தைச் சேர்த்த பிரக்ஞானந்தா கலந்து கொண்டு ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளார்.

இன்று வெற்றியுடன் சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவை முதல்வர் தலைமை செயலகத்திற்கு அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சருடன் செஸ் விளையாடிய பிரக்ஞானந்தா | Cm Vijay Play Chess With Praggnanandhaa

நார்வே செஸ் போட்டி மே 25 முதல் ஜுன் 5ம் தேதி வரை நடைபெற்ற நிலையில், குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கால்சன், வின்சென்ட் கெய்மர் போன்ற ஜாம்பவான்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு கோயில்களில் ஆன்லைன் டிக்கெட் முறை.... அமைச்சர் ரமேஷ்

தமிழ்நாடு கோயில்களில் ஆன்லைன் டிக்கெட் முறை.... அமைச்சர் ரமேஷ்

இதில் தான் பிரக்ஞானந்தா வின்சென்ட்டை வீழ்த்தியுள்ளார். மேலும் நார்வே செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார்.

முதலமைச்சருடன் செஸ் விளையாடிய பிரக்ஞானந்தா | Cm Vijay Play Chess With Praggnanandhaa

முதல்வர் விஜய் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உயரிய ஊக்கத் தொகையான ரூ. 50 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார்.

அதுமட்டுமின்றி பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடி இறுதியில் தோல்வியையும் சந்தித்துள்ளார்.

முதல்வர் விஜய்யை விமர்சித்த டிடிவி தினகரன்

முதல்வர் விஜய்யை விமர்சித்த டிடிவி தினகரன்