மாற்றப்படும் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் - யார் யார் தெரியுமா?

M K Stalin Tamil nadu DMK
By Sumathi May 11, 2023 04:03 AM GMT
Report

இன்று பதவியேற்கும் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இலாகா மாற்றம்

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் தலைமையில் இருமுறை மட்டுமே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என தகவல்கள் வெளியாகியது.

மாற்றப்படும் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் - யார் யார் தெரியுமா? | Tamil Nadu Cabinet Reshuffle Lists

அதன்படி, ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின் பேரில், பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு. நாசர் நீக்கப்பட்டு, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

தகவல்

அதனைத் தொடர்ந்து, டிஆர்பி ராஜா இன்று காலை பதவியேற்கும் நிலையில், மேலும் சில அமைச்சர்களின் இலாக்காக்களின் மாற்றியமைக்கப்படும் எனத் தெரிகிறது. தொழில்துறை அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசுவுக்கு,

பிடிஆர் பழனிவேல் ராஜன் வகித்து வரும் நிதித்துறை வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை வழங்கப்படுவதுடன் மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறை வழங்கப்படலாம் எனத் தெரிய வருகிறது.