முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் - ரூ.1000 திட்டத்திற்கு ஒப்புதல்?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
நிதிநிலை அறிக்கை
சட்டப்பேரவையில் வரும் 20-ம் தேதி காலை 10 மணிக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கிறார். அதைத்தொடர்ந்து, மறுநாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அமைச்சரவை
இதுதவிர, மாணவர்கள், இளைஞர்களுக்கான பல்வேறு புதிய திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கு இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
மேலும், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.