தமிழக அமைச்சரவையில் 2 இளம் அமைச்சர்கள் - யாரெல்லாம் தெரியுமா?

M K Stalin Government of Tamil Nadu DMK
By Sumathi Sep 26, 2024 04:52 AM GMT
Report

தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அமைச்சரவை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

udhaynidhi stalin with mk stalin

தொடர்ந்து, ஜி.கே.எம். காலனியில் நடைபெறும் சமுதாய நலக்கூடத்தின் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அங்கு திட்டப்பணிகளின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

திமுக வெற்றிக்கு உதவிய பிரதமர் நரேந்திர மோடி..உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்!

திமுக வெற்றிக்கு உதவிய பிரதமர் நரேந்திர மோடி..உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்!

ஸ்டாலின் பதில்

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் இருக்குமா? உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மாற்றம் இருக்கும். ஏமாற்றம் இருக்காது என பதிலளித்துள்ளார்.

mk stalin

இதற்கிடையில் மூத்த அமைச்சர்கள் 2 பேர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, மாற்றத்தின்போது 2 புதிய இளம் அமைச்சர்களை சேர்க்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.