திமுக வெற்றிக்கு உதவிய பிரதமர் நரேந்திர மோடி..உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்!
திமுகவின் வெற்றிக்கு மோடி எவ்வாறு காரணமாக இருந்தார் என்பது குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் திமுக பவள விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. முதலாவது காரணம் நரேந்திர மோடி தான்.
அவர்தான் திமுகவிற்கு வெற்றியை தேடி கொடுத்தார். நான் 23 நாட்கள் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் செய்தேன். அப்போது நான் சந்தித்த மக்கள் அனைவரிடமும் பாஜக மீது வெறுப்பு இருந்தது. அதை தொடங்கி வைத்தது மோடிதான்.
தமிழ்நாட்டில் புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் பாதிப்புகளின் போது ஒருமுறை கூட வராத மோடி, நாடாளுமன்ற தேர்தல் அறிவித்த பிறகு 8 முறை முறை தமிழகத்தில் பிரச்சாரத்திற்காக வந்தார்.
பிரச்சாரம் முடிந்த பிறகும், கன்னியாகுமரி விவேகானந்தர் சிலையில் தியானம் செய்கிறேன் என்று கூறி சினிமா படப்பிடிப்பு கூட அவ்வளவு சிறப்பாக நடைபெறாது, அந்த அளவு விதவிதமாக கேமரா ஆங்கிள் வைத்து படம்பிடித்தார்.
பிரதமர் மோடி
அவருடைய பருப்பு வடநாட்டில் வெந்திருக்கலாம், ஆனால் தமிழ்நாட்டில் என்றும் வேகாது.தமிழ்நாட்டிற்கான உரிமைகளை மத்திய அரசு பறித்து விட்டது. அதற்காக நாம் போராடி வருகிறோம்.
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான் அதற்கான உதவித்தொகைகள் வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவிக்கிறது. ஆனால் அந்த புதிய கல்வி கொள்கையில் மும்மொழி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உள்ளது.
மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் ஏற்பட்டபோது தமிழக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியது, ஆனால் மத்திய அரசு எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும் வழங்கவில்லை.
ஜிஎஸ்டி வரியாக 1 ரூபாய் வழங்கினால் அதற்கு 28 பைசா மட்டுமே திருப்பி வழங்குகிறார்கள். இது போன்றவற்றை மக்கள் உணர்ந்ததன் காரணமாக திமுகவை மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். என்று தெரிவித்துள்ளார்.