பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மாற்றம் - தமிழிசைக்கு புதிய பதவி!
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவதாக தகவல் பரவி வருகிறது.
பாஜக தலைவர் தேர்வு
தமிழக பாஜக தலைவரை தேர்வு செய்ய தேர்தல் அதிகாரியாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களிலும் பாஜகவின் மாவட்ட தலைவர்கள், மாநில தலைவர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.
புதுச்சேரி மாநில பாஜக தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தல் அதிகாரியாக தரும் சூக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அந்தமான் யூனியன் பிரதேச பாஜக தலைவரை தேர்வு செய்வதற்காக தமிழிசை சௌந்தரராஜன் தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அண்ணாமலை மாற்றம்?
இதன்படி, ஒருவர் தலைவர் பதவியில் இருமுறை இருக்கலாம். அந்த வகையில் தமிழகத்தை பொறுத்தவரை மீண்டும் அண்ணாமலைக்கே வாய்ப்பு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமையாமல் போனதற்கு அண்ணாமலை தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. எனவே, அதிமுகவுடன் இணக்கமாக செல்பவர்களை நியமிக்கலாமா என்றும் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.