2 கேஸ் சிலிண்டர் இருக்கா? அப்போ சிக்கல் தான் - தமிழக அரசு அதிரடி!
கேஸ் சிலிண்டர்கள் குறித்து தமிழக அரசு முக்கிய முடிவெடுத்துள்ளது.
கேஸ் சிலிண்டர்
தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பத்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாகவே சென்று அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். புதிதாக ரேஷன் கார்டுகள் கேட்டு 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தொடர்ந்து, விண்ணப்பங்களில், தகுதியான கார்டுகளை தேர்ந்தெடுக்க விண்ணப்பத்துடன் இணைத்திருக்கும் ஆவணங்கள் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்யும் பணி நடந்து வந்தது. இந்நிலையில், தமிழக அரசு கூட்டுறவுத்துறைக்கு புதிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
சமையல் கேஸ் சிலிண்டர் இணைப்பு இல்லாத ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் ஒரு சிலிண்டர் இணைப்பு உள்ளவர்களுக்கு, ரேஷனில் லிட்டர் மண்ணெண்ணெய், 15 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. கார்டுதாரர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, மாநில அரசுகளுக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை, மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது.
அரசு முடிவு
ஆனால் தமிழகத்தில், 2.24 கோடி ரேஷன் கார்டுதாரர்களில், 30 லட்சம் பேர் காஸ் இணைப்பு இல்லாமல் உள்ளதால், தலா ஒருவருக்கு, 5 லிட்டர் வரை மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது. தமிழக மண்ணெண்ணெய் குறைப்புக்கு, ரேஷன் கார்டுதாரர்கள் எண்ணிக்கையை விட, வீட்டு காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமே காரணம் என்று மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஒருவரே, 2, 3 காஸ் இணைப்பு பெற்றிருப்பதால்தான், அதிக வாடிக்கையாளர்கள் இருப்பதாக, தமிழக அரசு கருதுகிறது.
அதனால்தான், தமிழகத்தில் மண்ணெண்ணெய் வாங்கக்கூடிய கார்டுதாரர்களின் வீடுகளில், உண்மையிலேயே காஸ் இணைப்பு இல்லையா என்பதை ஆய்வு செய்யுமாறு, உணவு வழங்கல் துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.