அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை; மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் - எவ்வளவு தெரியுமா?
வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது.
கியாஸ் சிலிண்டர்
சர்வதேச சந்தையில் இந்தியா பண மதிப்பு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டு பெட்ரோல், டீசல், கியாஸ் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கேஸ் சிலிண்டர் விலைகள் மாதத்திற்கு ஒருமுறை அல்லது தேவைக்கேற்ப மாற்றி அமைக்கப்படும். அந்தவகையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ.1,968.50க்கு விற்பனை செய்யப்பட்டு நிலையில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.
விலை குறைந்தது
சென்னையில் இன்று ரூ.39.50 குறைந்து ரூ.1,929க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ.918.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வணிக சிலிண்டர் விலை குறைந்துள்ளதால் ஓட்டல்களில் உணவு விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.