தமிழ் அழகான,சக்திவாய்ந்த மொழி..எல்லா மாநிலங்களுக்கும் சொல்ல வேண்டும் - ஆளுநர் ரவி!

Tamil nadu R. N. Ravi India
By Swetha Sep 03, 2024 09:45 AM GMT
Report

அனைத்து மாநிலங்களுக்கும் தமிழை எடுத்துச் செல்ல வேண்டும் என ஆளுநர் ஆர்.என் ரவி பேசியுள்ளார்.

ஆளுநர் ரவி

சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கு மற்றும் பரிசளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ் மொழியை எடுத்து செல்ல வேண்டும்.

தமிழ் அழகான,சக்திவாய்ந்த மொழி..எல்லா மாநிலங்களுக்கும் சொல்ல வேண்டும் - ஆளுநர் ரவி! | Tamil Is A Beautiful And Powerfull Lang Says Ravi

தமிழ் பத்திரிகைகளை வாசிக்கிறேன். யாராவது தமிழில் பேசினால் புரிந்து கொள்கிறேன். தமிழ் மொழி அழகான, சக்திவாய்ந்த மொழி; அதை கற்றுக் கொண்டு இருக்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் படிக்கும் மாணவர்களின் அறிவுத்திறன் குறைவு - ஆளுநர் ரவி பேச்சு!

தமிழகத்தில் படிக்கும் மாணவர்களின் அறிவுத்திறன் குறைவு - ஆளுநர் ரவி பேச்சு!

தமிழ் மொழி

மேலும், சில நாட்களுக்கு முன்பு, ' மத்திய பாடத்திட்டத்தைவிட மாநில பாடத்திட்டத்தின் தரம் குறைவாக இருக்கிறது என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநில கல்வி குறித்த அவதூறு பேச்சுக்கு ரவி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் அழகான,சக்திவாய்ந்த மொழி..எல்லா மாநிலங்களுக்கும் சொல்ல வேண்டும் - ஆளுநர் ரவி! | Tamil Is A Beautiful And Powerfull Lang Says Ravi

அதற்கு, மாணவர்கள் தங்கள் மாநில பாடத்திட்டத்தையும் தாண்டி சிந்திக்க வேண்டும், நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ், ஏ.ஐ தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை கற்க வேண்டும் என ரவி பேசியதை வழக்கம்போல் திரித்துப் பேசி அரசியாலக்க முயற்சி நடப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.