தமிழகத்தில் படிக்கும் மாணவர்களின் அறிவுத்திறன் குறைவு - ஆளுநர் ரவி பேச்சு!

M K Stalin Tamil nadu R. N. Ravi Governor of Tamil Nadu
By Vidhya Senthil Sep 02, 2024 05:08 AM GMT
Report

 தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வித்தரம் குறைவாக உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

ஆர்.என்.ரவி

சென்னையில் தனியார்ப் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு ஆசிரியர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், “பெண்களால் இந்த நாடு உருவாக்கப்பட்டுள்ளது.

rn ravi

நமது ஆன்மீகத்தையும், கலாச்சாரத்தையும் காலனிய ஆதிக்கம் ஒடுக்கிய போது சத்தியமும், தர்மமும் தான் வென்றது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,''உலகமே இந்தியாவின் ஆற்றல் திறனைக் கவனித்து வருகிறது. எந்த ஒரு பிரச்சினைக்கும் இந்தியாவிடம் ஆலோசனை கேட்கப்படுகிறது.

உச்சநீதிமன்றத்தின் அழுத்தம் - ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறாரா ஆர்.என்.ரவி..?

உச்சநீதிமன்றத்தின் அழுத்தம் - ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறாரா ஆர்.என்.ரவி..?

 கல்வித்தரம்

100வது ஆண்டு சுதந்திர தினம் 2047ஆம் ஆண்டில் கொண்டாடும் போது, இந்தியா முழுமையாக வல்லரசு பெற்று விளங்கும் என்று கூறினார். மேலும் மாநில பாடத்திட்டம் தேசியப் பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது மோசமாக உள்ளதாகத் தெரிவித்த அவர் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வித்தரம் குறைவாக உள்ளது.

தமிழகத்தில் படிக்கும் மாணவர்களின் அறிவுத்திறன் குறைவு - ஆளுநர் ரவி பேச்சு! | Rn Ravi Says Tn State Education Curriculum Is Poor

நான் பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடம் பேசினேன். அப்போது அவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்றவற்றைப் பற்றியான அறிவுத்திறன் குறைவாக உள்ளது. எனவே பள்ளி மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறினார்.