எய்ட்ஸ் நோய்.. எலும்பு தெரிய தர்கா வெளியில் கிடந்த நடிகை - சோகமான இறுதி நாட்கள்!
பட வாய்ப்பு இல்லாததால் மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட தமிழ் நடிகையின் இறுதி நாட்கள்.
நடிகை நிஷா நூர்
தமிழ் சினிமாவில் டிக் டிக் டிக், இனிமை இதோ இதோ, ஸ்ரீ ராகவேந்திரா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நிஷா நூர். இவர் பாலசந்தர், விசு உள்ளிட்ட இயக்குநர்களின் படங்களில் நடித்துள்ளார்.

சில படங்களில் நடித்த பிறகு பட வாய்ப்பு இல்லாததால் இவர் வருமானத்திற்கு வழியில்லாமல் இருந்துள்ளார். பின்னர் சில காலம் அவர் எங்கே போனார் என்று தெரியாமல் இருந்த நிலையில், கடந்த 2007-ம் ஆண்டு தர்கா ஒன்றின் வெளிப்புறம் அடையாளம் காணப்பட்டார்.
மோசமான நிலை
அப்போது அவர் உடல் எலும்புகள் தெரிய மிக மோசமான நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து அவரை பரிசோதித்ததில், அவருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இறுதியாக கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி அவர் காலமானார்.

சினிமாவில் சில நடிகர்களின் வாழ்க்கை ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் இருப்பதுண்டு. அப்படியான ஒரு நடிகைதான் இந்த நிஷா நூர். இவரது மரணமும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாகவே உள்ளது.
திரைமறைவில் நடந்த டீல் - திமுக ஆதரவோடு முதல்வராக எடப்பாடி - அம்பலப்படுத்திய சி.வி.சண்முகம் IBC Tamil
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan