எனக்கும் நயனுக்கும் அது நடக்க காரணமே அந்த நடிகர் தான் - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்!
நயன்தாராவுடன் காதல் ஏற்பட மறைமுக காரணம் நடிகர் தனுஷ் தான் என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
நயன் - விக்கி
தென்னிந்தியா மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ஐயா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், தபோது லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கும் அளவிற்கு வளர்த்துள்ளார். மேலும், தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்கத் துவங்கியுள்ளார்.
இவர் கடந்த கடந்த 2022-ம் ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து 2022 -ல் வாடகைத் தாய் மூலம் 2 மகன்களை பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் நயன்தாராவுடன் காதல் ஏற்பட மறைமுக காரணமாக இருந்தது நடிகர் தனுஷ்தான் என விக்னேஷ் சிவன் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது "நானும் ரெளடிதான்' படக்கதையை விஜய் சேதுபதியிடம் கூறினேன்.
தனுஷுக்கு நன்றி
ஆனால், அவர் கதையில் கன்வின்ஸ் ஆகாததால் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், நயன்தாராவிடம் கதை சொல்லும்படி என்னை அனுப்பினார். கதை கேட்டதும் நயனுக்கு உடனே பிடித்து விட்டது.
நடிக்கவும் ஒப்புக் கொண்டார். அவர் சம்மதம் சொன்னதும் விஜய் சேதுபதியும் நடிக்க ஒப்புக் கொண்டார். அந்த சமயத்தில் நயனுடன் அதிக நேரம் செலவிட முடிந்தது. இருவருக்குள்ளும் புரிதல் உருவானது.
பழக ஆரம்பித்த சில மாதங்களிலேயே இந்த உறவு காதல் என்பது எங்களுக்கு புரிந்து விட்டது. அதனால், எங்கள் காதலுக்கு மறைமுகமாக பிள்ளையார் சுழி போட்ட தனுஷுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.