கோமியத்தை விற்றுக்கூட வாழலாம்; தமன்னாவின் டைலாக் - வெடித்த சர்ச்சை
தமன்னா நடித்துள்ள ஓடேலா 2 படத்தின் ட்ரெய்லர் பேசுபொருளாகியுள்ளது.
தமன்னா
கடந்த 2022ல் அசோக் தேஜா இயக்கத்தில் வெளியான தெலுங்கு படம் ‘ஒடேலா ரயில்வே ஸ்டேஷன்’. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் தமன்னா நடித்துள்ளார். படம் வரும் ஏப்ரல் 27 வெளியாகவுள்ளது. முன்னதாக இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சர்ச்சையாக வெடித்துள்ளது.
ஓடேலா 2 ட்ரெய்லர்
அதில் தமன்னா, "நாம நிக்கிறதுக்கு தேவை பூமாதா, நாம வாழ்றதுக்கு தேவை கோமாதா, நீங்க வாழ மாட்டைக் கொல்ல வேண்டிய அவசியமில்லை.. கோமியத்தை வித்துக்கூட பொழச்சிக்கலாம்" என்ற வசனத்தை பேசியுள்ளார்.
தமன்னாவின் odela 2 டிரெய்லர் பார்க்க போனால் "நீங்க இருப்பதற்கு பூ மாதா, வாழ்வதற்கு கோமாதா. நீங்க வாழ கோமாதாவை ஏன் கொல்றீங்க, அதோட உச்சாவை எடுத்து வித்தாலும் வாழலாம்" என்று வசனம் பேசுறாங்க தமன்னா.
— ModernMaverick (@arcot2arctic) April 8, 2025
என்ன டா டயலாக் இது, எவண்டா எழுதி கொடுத்தான், அதை ஏன் இப்படி பேசுது தமன்னா pic.twitter.com/0JvBFkmzxq
தற்போது இதனை பயங்கரமாக ட்ரோல் செய்துவரும் நெட்டிசன்கள், தமிழ் வசனங்களில் கவனம் செலுத்தியிருக்கலாம் என ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.