எனக்கும் அந்த நோய் இருந்தது; வெளியில் சொல்ல கெளரவ குறைச்சல் - சுஹாசினி ஓபன்டாக்
தனக்கு இருந்த காசநோய் குறித்து நடிகை சுஹாசினி மனம் திறந்துள்ளார்.
நடிகை சுஹாசினி
1980களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சுஹாசினி. ரஜினிகாந்த், சத்யராஜ், உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தொடர்ந்து சுஹாசினி, மணிரத்னம் இயக்கிய படங்களில் பணியாற்றிய போது அவரை காதலிக்க துவங்கினார். 1988ல் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு 1 மகன் உள்ளார்.
சுஹாசினி தன்னுடைய கணவரின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனத்திலும் நிர்வாகிகளில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் இவருக்கு சிறுவயது முதலே காசநோய் இருந்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அவர், ”எனக்கு ஆறு வயதிலேயே காசநோய் பிரச்னை இருந்தது.
காசநோய் பாதிப்பு
அதற்கு சிகிச்சை எடுத்தேன். பிறகு குறைந்துவிட்டது. எல்லாம் சரியாகி விட்டது என்று இருந்தேன். ஆனால் 36 வயதில் மீண்டும் அந்த வியாதி வந்து விட்டது. இதன் காரணமாக எனக்கு திடீரென்று எடை கூடி விட்டது. அதுமட்டுமன்றி கேட்கும் திறனிலும் பிரச்சினை ஆரம்பித்து விட்டது.
மீண்டும் சிகிச்சை எடுத்துக் கொண்டேன். சிகிச்சைக்கு பிறகு மெல்ல மெல்ல காச நோய் பாதிப்பு குறைந்து குணமாகி விட்டேன். இதை அப்போது யாருக்கும் தெரியாமல் மறைத்து விட்டேன். வெளியே சொல்வதை கவுரவக் குறைவாகவும் நினைத்தேன்.
ஆறு மாதங்கள் ரகசியமாகவே சிகிச்சை எடுத்துக் கொண்டேன். அதை இப்போது சமூகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே வெளியே சொல்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.