தமன்னாவுடன் நெருக்கம்; டேட்டிங்கில் ஒத்துழைப்பு கொடுத்தாங்க - காதலர் விஜய் வெளிப்படை!
தமன்னா குறித்து காதலர் விஜய் பேசியது வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் வர்மா
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. தமிழ் சினிமாவின் டாப் நடிர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். தொடர்ந்து ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என ஹாட்டான வெப்சீரிஸ்களில் நடித்துள்ளார்.
அண்மையில் ரஜினியுடன் ஜெயிலர் பட பாடலில் கலக்கியிருந்தார். இதற்கிடையில் தமன்னா, நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் விஜய் வர்மா அளித்த பேட்டி ஒன்றில்,
லஸ்ட் ஸ்டோரிஸில் நானும் தமன்னாவும் நடிக்கும்போது டேட்டிங் செல்ல தொடங்கவில்லை. நாங்கள் ஒரு பார்ட்டி வைக்க விரும்பினோம். அந்த பார்ட்டியில் நான்கு பேர் மட்டுமே கலந்து கொண்டார்கள். அப்போது, தமன்னாவிடம் உங்களுடன் அதிக நேரம் செலவிட விரும்புகிறேன் என்று சொன்னேன்.
தமன்னாவுடன் டேட்டிங்
இந்த நாளில் இருந்து 20 முதல் 25 நாளைக்கு பிறகு நாங்கள் டேட்டிங் சென்றோம் எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில், பயில்வான் ரங்கநாதன் தமன்னாவை ஒரு நைட் பார்ட்டியில் சந்தித்தேன் அப்போது நான், அவரிடம், ஒரு நாள் முழுவதும் என்னிடம் இருக்க வேண்டும்.
டேட்டிங் செல்லலாமா என்று கேட்டேன். அவரும் ஓகே சொன்னார். டேட்டிங்கில் எனக்கு தமன்னா சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார் என்று கூச்சமே இல்லாமல் பேசி இருக்கிறார். இதனால், விஜய் வர்மாவிற்கு பிரச்சனை இல்லை. தமன்னாவிற்குத் தான் இதனால், தர்ம சங்கடம் என விமர்சித்துள்ளார்.