கீர்த்தி சுரேஷை தொடர்ந்து திருமணத்திற்கு தயாராகும் தமன்னா - எப்போது தெரியுமா?
நடிகை தமன்னாவின் திருமண ஏற்பாடுகளில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகைகள் திருமணம்
நடிகை ரம்யா பாண்டியன் தனது காதலரான லோவல் தவானை கடந்த நவம்பர் 8 ஆம் தேதி ரிஷிகேஷில் திருமணம் செய்தார். இவர்களின் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் 15 ஆம் தேதி நடைபெற்றது.

இதனையடுத்து நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்டகால காதலரான ஆண்டனி தட்டில் டிசம்பர் மாதம் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமன்னா திருமணம்
இந்நிலையில் நடிகை தமன்னாவும் தனது காதலரை கரம் பிடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் பல நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக வலம் வந்தனர்.

முன்னதாகவே தமன்னா அளித்த பேட்டி ஒன்றில் 2025 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார். இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர் இணைந்து வாழ்வதற்கான ஆடம்பர வீட்டை வாங்கும் முயற்சியில் தற்போது இருவரும் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது
. தற்போது தமன்னா ஒரு ஹிந்தி மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களிலும் நடித்து முடித்த பின்னர் 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என கூறப்படுகிறது.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan