இயக்குநருடன் ரகசிய திருமணமா? உண்மையை உடைத்த அனுஷ்கா

Anushka Shetty Tamil Cinema Marriage Tamil Actress
By Karthikraja Nov 09, 2024 03:00 PM GMT
Report

ரகசிய திருமணம் செய்துகொண்டதாக வரும் செய்திகளுக்கு அனுஷ்கா விளக்கமளித்துள்ளார்.

அனுஷ்கா ஷெட்டி

ரெண்டு என்ற திரைப்படம் மூலம் மாதவனுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. 

anushka shetty

இதன்பின் சிங்கம், வேட்டைக்காரன், என்னை அறிந்தால் ஆகிய படங்களில் நடித்து தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். மேலும் பல்வேறு தெலுங்கு படங்களிலும் நடித்து வந்துள்ளார். 

எனக்கு அந்த நோய் இருக்கு; கட்டுப்படுத்துறது கஷ்டம் - வேதனையை பகிர்ந்த அனுஷ்கா!

எனக்கு அந்த நோய் இருக்கு; கட்டுப்படுத்துறது கஷ்டம் - வேதனையை பகிர்ந்த அனுஷ்கா!

ரகசிய திருமணம்

2018 ஆம் ஆண்டு வெளியான பாகமதி படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் அனுஷ்கா தலை காட்டவில்லை. சமீபத்தில் தனது 43வது பிறந்தநாளை கொண்டாடிய அனுஷ்கா தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

பாகுபலி படத்தில் நடித்து வரும் போதே அனுஷ்கா ஷெட்டியும் பிரபாஸும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதை இருவரும் மறுத்து வந்தனர். 

anushka shetty prakash kovelamudi

இந்நிலையில் இஞ்சி இடுப்பழகி பட இயக்குநர் பிரகாஷ் கோவெலமுடியை அனுஷ்கா ஷெட்டி ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. 2015 ஆம் ஆண்டு இஞ்சி இடுப்பழகி படத்திற்காக இருவரும் இணைந்து பணியாற்றிய போது காதல் மலர்ந்ததாகவும், 2020 ஆம் ஆண்டு ரகசிய திருமணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

அனுஷ்கா விளக்கம்

இது குறித்து நேர்காணல் ஒன்றில் விளக்கமளித்த அனுஷ்கா ஷெட்டி, "இது போன்ற செய்திகள் உண்மையில்லை. இந்த வதந்திகளால் நான் ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை. என் திருமணம் ஏன் மற்றவர்களுக்கு இவ்வளவு பெரிய விஷயம் என்று தெரியவில்லை. திருமண உறவை யாரும் மறைக்க முடியாது. 

anushka shetty about her marriage

அப்படியிருக்கும் போது நான் எப்படி எனது திருமணத்தை மறைக்க முடியும். எனக்கு தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. அதில் மற்றவர்கள் தலையிட முயல்வது எனக்கு பிடிக்காது. எனது திருமணம் நடைபெறும்போது மக்களுக்கு தெரியும்" என கூறினார்.