கிளாமரா ஆடினா என்ன? இனியும் இப்படித்தான் பண்ணுவேன் - தமன்னா பளார்!
கிளாமரான பாடலில் நடனமாடுவது குறித்து தமன்னா மனம் திறந்துள்ளார்.
நடிகை தமன்னா
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து, தனுஷுடன் நடித்த படிக்காதவன் திரைப்படம் ஹிட் ஆனது.
டாப் நடிர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அண்மையில் ரஜினி உடன் "ஜெயிலர்" திரைப்படத்தில் போட்ட ஆட்டம் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தது. இதற்கிடையில், ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என ஹாட்டான வெப்சீரிஸ்களில் நடித்தார்.
அது ஓடிடி தளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், “கிளாமரான பாடலைப் பற்றிய பார்வையானது மாற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். உண்மையில் அவை கிளாமரை கொண்டாடும் செயல்முறை தான்.
கிளாமர் பாடல்கள்
பெண்களும் இந்த மாதிரியான ஒரு பார்வையை எடுத்து வர வேண்டும். அந்த பாடலில் இருக்கக்கூடிய சில விஷயங்கள் மிகவும் கீழ்த்தரமானவையாக இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், அது ஒரு கொண்டாட்டம் அவ்வளவே.. இதன்மூலம் மக்களுடன் எனக்கு பெரிய கனெக்சன் உண்டாகிறது ஒரு சிறிய குழந்தை கூட அந்த பாடலைக் கேட்டு ஆடுகிறது.
இதுதான் ஒரு நடிகராக,ஒரு நடன கலைஞராக என்னுடைய வேலை என்று நினைக்கிறேன்.
தன் எதிரே இருக்கக்கூடிய மனிதரின் மகிழ்ச்சியை வெளியே கொண்டு வர வேண்டும். இது போன்ற பாடல்களை நான் தொடர்ந்து செய்ய போகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.