கேரவன் உள்ளே தமன்னாவிற்கு நடந்த கொடூரம் - அவரே சொன்ன விஷயம்
கேரவனில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வு குறித்து தமன்னா பேசியுள்ளார்.
தமன்னா
தமிழில் பையா, அயன், சிறுத்தை, வீரம் என பல்வேறு படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா.
தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் ஹிந்தி என பல்வேறு மொழிப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் ஒடெலா 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
கேரவனில் நடந்த சம்பவம்
இந்நிலையில் பாட்காஸ்ட் நிகழ்வு ஒன்றில் தமன்னா தனக்கு கேரவனில் நடந்த நிகழ்வு குறித்து பேசியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய அவர், "ஒருமுறை கேரவனில் வைத்து எனக்கு விரும்பத்தகாத நிகழ்வு நடந்தது. அதை கண்டு என் கண்கள் கலங்கிவிட்டது.
நான் அப்போது ஷூட்டிங்கிற்காக மேக்அப்பில் இருந்ததால் என்னால் அழ முடியவில்லை. அப்போது அழ கூடாது, இதனை கட்டுப்படுத்த வேண்டும் என எனக்குள்ளே கூறிக்கொண்டேன். அதன்பிறகு, சோகத்தில் இருந்து மகிழ்ச்சியான உணர்வுக்கு மாறினேன்" என கூறினார்.
ஆனால் என்ன நடந்தது என்றோ, எந்த படத்தின் படப்பிடிப்பு என்றோ தமன்னா கூறவில்லை. தமன்னாவிற்கு என்ன நடந்தது, யாரால் தமன்னா கண்கலங்கினார் என ரசிகர்கள் விவாதித்து வருகிறார்கள்.