காதலருக்காக முத்தக்காட்சி; 30 வயதில் திருமணம், குழந்தைகள் - தமன்னா ஆதங்கம்!
திருமணம் குறித்து நடிகை தமன்னா வெளிப்படையாக பேசியுள்ளார்.
தமன்னா
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து, இவர் தனுஷுடன் நடித்த படிக்காதவன் திரைப்படம் ஹிட் ஆனது.
மேலும் இவருக்கு தமிழ் சினிமாவின் டாப் நடிர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது ரஜினி உடன் நடித்துள்ள "ஜெயிலர்" திரைப்படம் வெளியாகவுள்ளது. முன்னதாக லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் சீரிஸில் நடித்தபோது, நடிகர் விஜய் வர்மாவுடன் காதலில் விழுந்ததாகவும்,
திருமணம்
அவருக்காகத்தான் 18 வருடங்களாக முத்தக்காட்சியில் நடிக்காமல் இருந்த தமன்னா, அவருடன் முதன் முறையாக நடித்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அண்மையில் பேசிய தமன்னா 30 வயதில் எனக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கும் என நினைத்தேன்.
ஆனால் தற்போது 30 வயதை தாண்டியும் சினிமாவில் பிசியாக நடித்து வருகின்றேன். நான் எப்போது திருமணத்திற்கு தயாராக இருக்கின்றேன் என உணர்கிறேனோ அப்போது கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது, இவரும், விஜய் வர்மாவும் நடித்துள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் சீரிஸ் விரைவில் வெளியாகவுள்ளது.