டேட்டிங்'ல போதும்..!! விரைவில் டும் டும் டும்..!! தேதியும் ஓகே..!! ரெடியான தமன்னா..!!
நடிகை தமன்னா விரைவில் தனது காதலரான விஜய் வர்மாவை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தமன்னா
2006-ஆம் ஆண்டு கேடி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான தமன்னா தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளிலும் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் அனைவருடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.
சில காலம் முன்பு இவருக்கும் இந்தி நடிகர் விஜய் வர்மாவிற்கும் காதல் ஏற்பட்டதாக தகவல் உலா வர அதனை இருவரும் முதலில் மறுத்தாலும், பிறகு சூசகமாக அறிவித்தனர். தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வரும் தமன்னா, விரைவில் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது 33 வயதாகும் நிலையில், தமன்னாவின் வீட்டில் திருமண பேச்சுவார்த்தைகளை துவங்கி விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. விஜய் வர்மா - தமன்னா இருவரின் காதல் பொதுவெளியில் வந்துவிட்ட நிலையில், இருவரும் விரைவிலேயே இவர்கள் திருமண பந்தத்தில் இணைவார்கள் என நம்பப்படுகிறது.
மேலும், திருமண குறித்தான விஷயங்கள் விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.