நெருக்கமா நடிக்கும் போது....அப்படி தான் உணர்ந்தேன்!! தமன்னா ஓபன் டாக்

Tamannaah
By Karthick May 16, 2024 08:02 PM GMT
Report

தமன்னா

2006-ஆம் ஆண்டு கேடி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான தமன்னா தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளிலும் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் அனைவருடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.

tamanna about acting in intimate scenes

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை நெருங்கும் அவர் தற்போது பிஸியான நடிகையாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் படங்கள் மற்றும் வெப் சீரியஸ் ஆகியவற்றில் நடித்து வருகின்றார். தமன்னா அண்மையில் ரஜினியின் "ஜெயிலர்", சிரஞ்சீவியின் "போலா ஷங்கர்" போன்ற படங்களில் நடித்திருந்தார்.

tamanna about acting in intimate scenes

தற்போது விரைவில் அவர் மலையாள மொழி படத்தில் மலையாள நடிகர் திலீப்புடன் அறிமுகமாகவுள்ளார் . இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான அரண்மனை 4 படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இனி அது மாதிரி படங்களில் நடிக்காம இருக்க ட்ரை பண்றேன்...வெளிப்படையாக சொன்ன தமன்னா

இனி அது மாதிரி படங்களில் நடிக்காம இருக்க ட்ரை பண்றேன்...வெளிப்படையாக சொன்ன தமன்னா

நெருக்கமான காட்சிகளில் 

இந்நிலையில், படங்களில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை குறித்து அவர் மனம் திறந்துள்ளார்.

இது குறித்து அவர் பேசும் போது, அந்தரங்க காட்சிகளை நடிகர்கள் அதிகம் விரும்புவதில்லை என தெரிவித்து நடிகைகளை விட அதிகளவில் நடிகர்களே பதட்டமாகவும் சங்கடமாக இருப்பதை தான் உணர்ந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

tamanna about acting in intimate scenes

மேலும், உடன் நடிக்கும் நடிகைகள் என்ன நினைப்பார்கள் என்று தான் அவர்களுக்கு தோன்றும் என்றும் அவர்களுக்கு இது போன்ற நிறைய கேள்விகள் இருக்கும் என்றும் கூறினார்.