இனி அது மாதிரி படங்களில் நடிக்காம இருக்க ட்ரை பண்றேன்...வெளிப்படையாக சொன்ன தமன்னா

Tamannaah Tamil Cinema Jailer Tamil Actress
By Karthick Oct 02, 2023 04:00 PM GMT
Report

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது அரண்மனை 4 படத்தில் நடித்து வருகின்றார்.

தமன்னா

2006-ஆம் ஆண்டு கேடி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான தமன்னா தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளிலும் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் அனைவருடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை நெருங்கும் அவர் தற்போது பிஸியான நடிகையாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் படங்கள் மற்றும் வெப் சீரியஸ் ஆகியவற்றில் நடித்து வருகின்றார்.

dont-want-to-act-in-those-kinds-of-films-tamanna

தமன்னா அண்மையில் ரஜினியின் "ஜெயிலர்", சிரஞ்சீவியின் "போலா ஷங்கர்" போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது விரைவில் அவர் மலையாள மொழி படத்தில் மலையாள நடிகர் திலீப்புடன் அறிமுகமாகவுள்ளார் .

அது மாதிரி படங்களில் நடிக்க கூடாது

ஃபிலிம்பேர் உடனான உரையாடல் ஒன்றில் பேசிய தமன்னா, தென்னிந்திய சினிமாவில் ஆணாதிக்க தன்மை நிறைந்துள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும் “தெற்கில் சில ஃபார்முலாக்கள் பயன்படுத்தப்படுகின்றன, ஏனெனில் அவை எளிதானவை என குறிப்பிட்ட தமன்னா, சில கமர்ஷியல் படங்களில், கதாபாத்திரங்களுடன் தன்னால் ஒப்பிட்டு கொண்டு நடிக்க முடியவில்லை என்றார்.

dont-want-to-act-in-those-kinds-of-films-tamanna

மேலும், தென்னிந்திய படங்களில் நச்சுத்தன்மை அதிகம் கொண்ட ஆண்மை கொண்டாடப்படும் அதுபோன்ற சில படங்களில் நடிக்காமல் இருக்க மனப்பூர்வமாக தான் முயற்சி செய்யதுவங்கியிருப்பதாகவும் தமன்னா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.