எனக்கானவர் இவர்தான், பிரபல நடிகருடன் காதல் - முதன்முறையாக ஓப்பனாக பேசிய தமன்னா!
பிரபல நடிகையான தமன்னா நடிகர் மீதான காதல் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
தமன்னா
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளம் வருபவர் தமன்னா. இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக உள்ளார். இவர் தற்பொழுது தமிழில் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் இந்தியில் தற்போது லஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்கிற வெப் தொடர் உருவாகி உள்ளது. இந்த வெப் தொடர் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இதில் விஜய் வர்மா, கஜோல் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார் தமன்னா. இந்த வெப் தொடருக்கான புரமோஷன் நிகழ்ச்சியில் இவர் தனது காதல் குறித்து பேசியுள்ளார்.
நடிகருடன் காதல்
இதனை தொடர்ந்து, அந்த நிகழ்ச்சியில் பேசிய இவர், “லஸ்ட் ஸ்டோரீஸ் ஷூட்டிங்கின்போது தான் நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமானோம். என்னோடு நிறைய நடிகர்கள் நடித்துள்ளார்கள். அவர்கள் மீது எனக்கு எந்தவித ஈர்ப்பும் வரவில்லை. ஆனால் விஜய் வர்மா உடன் வந்துள்ளது என்றால் அது ஸ்பெஷல் தான்.
நான் இவ்வளவு நாளாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் இவர் தான். யாருக்காக நம்மை மாற்றிக்கொள்ளவும் தயாராக இருக்கிறோமோ அவர் தான் நமக்கானவர். அப்படி விஜய் வர்மா எனக்கு உள்ளார். என்னுடைய மகிழ்ச்சியான இடமும் அவர்தான்” என்று கூறி தனது காதலை உறுதி செய்துள்ளார்.