உலகிலேயே உயரமான சிவன் சிலை திறப்பு - தவக்கோலத்தில் காட்சி!
உலகிலேயே உயரமான சிவன் சிலை திறக்கப்படுகிறது.
சிவன் சிலை
ராஜஸ்தான், ராஜ்சமந்த் மாவட்டம், நத்வாரா நகரில் சிவன் சிலை திறக்கப்படுகிறது. இதற்கு விஸ்வரூபம் என பெயரிடப்பட்டுள்ளது. 369 அடி உயரமுள்ள இந்த சிலை சுற்றுலாத்தலமான உதயப்பூரில் இருந்து 45 கி.மீ தொலைவில், ஒரு குன்றின் மீது தியானம் செய்வது போல் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை 20கி.மீ தொலைவில் இருந்து கூட பார்க்க முடியும். இரவிலும் கானக்கூடிய வகையில் வண்ண ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 4 லிப்டுகள், 3 வரிசை படிக்கட்டுகள் மூலம் பக்தர்கள் உள்லே சென்று கண்டு ரசிக்கும்படி ஒரு அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது.
369 அடி
3 ஆயிரம் டன் உருக்கு மற்றும் இரும்பு, கான்கிரீட் மற்றும் மணல் ஆகியவற்றை பயன்படுத்தி, 10 ஆண்டுகளில் இந்த சிலை கட்டப்பட்டுள்ளது. சுமார் 250 ஆண்டுகள் நீடிக்கும் வகையிலும், 250கி.மீ வேகத்தில் வீசும் காற்றை தாங்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனைச் சுற்றிலும், சுற்றுலா பயணிகளுக்கு ஏதுவாக சாகச சுற்றுலா வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த சிலை முதலமைச்சர் அசோக் கெலாட் முன்னிலையில் திறக்கப்படுகிறது. இதில் சட்டசபை சபாநாயகர் சி.பி.ஜோஷி உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.