18 அடி உயரத்தில் நித்தியானந்தாவுக்கு சிலை வைத்து கும்பாபிஷேகம்? - அதிர்ச்சி அடைந்த பக்தர்கள்

Nithyananda
By Nandhini Jul 11, 2022 11:45 AM GMT
Report

நித்தியானந்தாவின் சீடர்

புதுச்சேரி மாநிலம், குருமாம்பேட் அருகே பெரம்பை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நித்தியானந்தாவின் சீடர் பாலசுப்பிரமணியம் வசித்து வந்தார். இவருக்கு நீண்ட நாள் கனவாக மலேசிய முருகன் கோவில் போல் இங்கு ஒரு கோவிலைக் கட்ட வேண்டும் என்று நினைத்து கோவிலையும் கட்டி வந்தார். கட்டி வந்த கோவில் 27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக கட்டி முடித்துள்ளார். இக்கோவிலுக்கு ஸ்ரீ பத்துமலை முருகன் ஆலயம் என்று வைத்து இன்று கும்பாபிஷேகம் நடந்தது.

Nithyananda

18 அடியில் நித்தியானந்தா சிலை

இந்த கும்பாபிஷேகத்திற்கு சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் படையெடுத்து வந்தனர். ஆனால், கோவிலின் நுழைவு வாயிலில் 18 அடி உயரத்தில் நித்தியானந்தா உருவம் கொண்ட பிரம்மாண்ட சிலை காணப்பட்டது. இந்த சிலையை பார்த்ததும் போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நித்யானந்தா சிவன் போல் வேடம் அணிந்து கையில் சூலத்துடன் இருந்த சிலையைப் பார்த்த பக்தர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

பக்தர்கள் ஆச்சரியம்

இது குறித்து கோவில் கும்பாபிஷேகம் செய்த சிவாச்சாரியார்களிடம் பேசுகையில், இந்த சிலை சிவனின் மற்றொரு அவதாரம். இது கால பைரவர். மேலும், ஸ்தபதி சிலையை முறையாக வடிவமைக்காததால் இப்படி இருக்கிறது என்றனர். ஆனால், கோவில் நிர்வாகி பாலசுப்பிரமணியன் அறை முழுவதும் நித்தியானந்தா புகைப்படம் ஓவியமாக திட்டி வைக்கப்பட்டிருந்தது. நித்தியானந்தா சிலையை ஆச்சரியத்துடன் பார்த்த பக்தர்கள், பொதுமக்கள் அச்சிலையின் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.       

மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளும் இந்தியா.. ஐநாவின் அதிர்ச்சி தகவல்!