பெண்களை கல்லெறிந்து கொல்லுவோம்; தண்டனை அமல் - தலிபான் அறிவிப்பு!
விபசாரத்தில் ஈடுபடும் பெண்களை கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
கல்லெறிந்து கொல்லுவோம்
கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்து ஆப்கானிஸ்தானை தலிபான் ஆட்சி செய்து வருகிறது. தங்களின் முந்தைய ஆட்சி போல கொடூரமாக இருக்காது என்று ஆட்சி தொடங்கும் முன் அறிவித்த தலிபான், நாளுக்கு நாள் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கினர்.
குறிப்பாக பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்படுகளை விதித்தனர். இதற்கு பல்வேறு தரப்புகள் எதிர்த்த போதிலும், பெண்கள் உயர் கல்வி கற்க தடை போன்ற பல விதிகள் அமல்படுத்தப்பட்டது.
தலிபான் அறிவிப்பு
இந்நிலையில், விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை பொது இடங்களில் கல்லெறிந்து கொல்லும் தண்டனை மீண்டும் தொடங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர். இது குறித்து தலிபான்களின் தலைவர் முல்லா ஹிபத்துல்லா அகுந்த்சாடா பேசியது அரசு தொலைக்காட்சியில் ஒலிப்பரப்பட்டது.
அதில், விபச்சாரத்திற்கான தண்டனையை விரைவில் அமல்படுத்துவோம். விபசாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு பொது வெளியில் கசையடி மற்றும் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்படும். காபூலை கைப்பற்றியதுடன் தலிபான்களின் பணி முடிவடையவில்லை. அவர்களின் பணி இப்போதுதான் தொடங்கியுள்ளது என அவர் கூறியுள்ளார்.