இளம்பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்;அடித்து சித்திரவதை செய்த 4 பேர் கைது!

Sexual harassment Madhya Pradesh
By Swetha Mar 28, 2024 02:42 AM GMT
Report

இந்தூர் கிராமத்தில் இளம்பெண்ணை அடித்து நிர்வாணமாக்கி ஊர்வலமாக நடத்திச் சென்ற 4 பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இளம்பெண் ஊர்வலம்

மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தூர் மாவட்டத்தில் உள்ள சச்சோடா என்னும்கிராமத்தில் 30வயது பெண்ணை ஹோலி பண்டிகையன்று அவரை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து நான்கு பெண்கள் அடித்து உதைத்துள்ளனர்.

இளம்பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்;அடித்து சித்திரவதை செய்த 4 பேர் கைது! | 4 Women Arrested For Stripping A Young Girl Naked

தொடர்ந்து அந்த பெண்ணின் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கி நடந்தபடியே ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அம்மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுனில் மேத்தா இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க அங்கு சென்றார். ஆனால், பாதிக்கப்பட்ட பெண், தனக்கு ஏற்பட்ட அவமானம் காரணமாக, அவரது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளதாக தெரிய வந்தது.

உலகின் நீளமான பாலம் எங்கே இருக்கு தெரியுமா? இங்கு நீங்கள் நினைத்தாலும் போய்விட முடியாது!

உலகின் நீளமான பாலம் எங்கே இருக்கு தெரியுமா? இங்கு நீங்கள் நினைத்தாலும் போய்விட முடியாது!

4 பெண்கள் கைது

இது குறித்து போலீசார் அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, பாதிக்கப்பட்ட பெண்ணை தரதரவென இழுத்து சென்ற நான்கு பெண்கள் அவரது ஆடைகளை களைந்ததாகவும், எவ்வளவு கெஞ்சியும் அவரை அடித்து உதைத்து ஊர்வலமாக நடத்திச் சென்றதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

இளம்பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்;அடித்து சித்திரவதை செய்த 4 பேர் கைது! | 4 Women Arrested For Stripping A Young Girl Naked

மேலும், இந்த சம்பவத்தை வீடியோ எடுத்தவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்படி, இளம்பெண்ணை சித்திரவதை செய்த அந்த நான்கு பெண்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

அத்துடன்,அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 354-ஏ (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் 452 (தவறாகத் தடுத்து நிறுத்துதல் மற்றும் தாக்குதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.