பெண்கள் குளிக்க கட்டுப்பாடு: புதிய உத்தரவு - தொடரும் கொடூரம்!
பொது இடங்களில் பெண்கள் குளிக்க தடை விதித்து தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தாலிபான் ஆட்சி
ஆப்கானிஸ்தானில் 1996 முதல் 2001 வரை ஆப்கனை தாலிபான்கள் ஆட்சி செய்த நிலையில், தற்போது 2வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளனர். அங்கு பெண்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகளை விதிக்கும் நடைமுறைய வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதன் அடிப்படையில், விமான பயணங்களில் பெண்கள் தனியாக பயணிக்க கூடாது. வேலைக்கு செல்ல கூடாது. மாணவிகள் பள்ளிக்கு செல்லக்கூடாது. மேலும் ட்ரைவிங் லைசன்ஸ் வழங்கவும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தலை முதல் கால் வரை முழுவதுமாக மறையும் வகையிலான புர்கா அணிய உத்தரவிட்டுள்ளனர்.
குளிக்க தடை
இந்த கட்டுப்பாடுகளுக்கு உலக நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த போதிலும், தாலிபான்கள் கண்டுக்கொள்ள கூட இல்லை. மேலும், பெண்கள் உடற்பயிற்சி கூடமான ஜிம் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளனர்.
ஆப்கானில் ‛ஹம்மம்' எனும் பொதுவான குளியல் மையம் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக இருக்கும். இதனை தினமும் ஏராளமானவர்கள் பயன்படுத்தி வந்தநிலையில் தான் ‛ஹம்மம்' எனும் பொது குளியல் மையம் செல்ல பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆப்கானிஸ்தான், நன்நெறி பாராமரிப்பு துறை செய்தி தொடர்பாளர் முகம்மது அமெப் மொகாஜீர் கூறுகையில், ‛‛ஆப்கானிஸ்தானில் தற்போது அனைவரின் வீட்டிலும் குளியல் அறை வசதி உள்ளது. இதனால் பெண்களுக்கு பொது குளியல் மையம் என்பது தேவைப்படாது. இதனால் தான் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது'' என கூறியுள்ளார்.