ஜோடியா சுத்தக்கூடாது.. பெண்களுக்கு பூங்கா செல்லத்தடை - கொடுமை!
பெண்களுக்கு ஜிம், பூங்கா செய்ய தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
தாலிபான்கள் ஆட்சி
ஆப்கானிஸ்தானில்1996 முதல் 2001 வரை ஆப்கனை தாலிபான்கள் ஆட்சி செய்த நிலையில், தற்போது 2வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளனர். அங்கு பெண்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகளை விதிக்கும் நடைமுறைய வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதன் அடிப்படையில், விமான பயணங்களில் பெண்கள் தனியாக பயணிக்க கூடாது. வேலைக்கு செல்ல கூடாது. மாணவிகள் பள்ளிக்கு செல்லக்கூடாது. மேலும் ட்ரைவிங் லைசன்ஸ் வழங்கவும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
பெண்களுக்கு தடை
தொடர்ந்து, தலை முதல் கால் வரை முழுவதுமாக மறையும் வகையிலான புர்கா அணிய உத்தரவிட்டுள்ளனர். இந்த கட்டுப்பாடுகளுக்கு உலக நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த போதிலும், தாலிபான்கள் கண்டுக்கொள்ள கூட இல்லை.
இந்நிலையில், தற்போது புதிய கட்டுப்பாடு ஒன்றை அறிவித்துளனர். பெண்கள் உடற்பயிற்சி கூடமான ஜிம் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
புது உத்தரவு
இதுகுறித்து, ஆப்கானிஸ்தான், நன்நெறி பாராமரிப்பு துறை செய்தி தொடர்பாளர் முகம்மது அமெப் மொகாஜீர் கூறுகையில், ”பெண்களும், ஆண்களும் வெவ்வேறு நாட்களில் பூங்கா செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
ஆனால் பல பூங்காக்களில் பலர் ஒன்றாக உள்ளனர். இதனால் பூங்கா மற்றும் ஜிம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது உத்தரவு இந்த வாரம் முதல் அமலுக்கு வர உள்ளது'' என தெரிவித்தார்.