”பெட்ரோல் விலை உயர்வுக்கு தாலிபான்கள் தான் காரணம்” பாஜக எம்.எல்.ஏ பரபரப்பு பேச்சு
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வதற்கு தலிபான்கள் தான் காரணம் என கர்நாடகா பா.ஜ.க. எம். எல் . ஏ . கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் , சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த அதிகாரத்தை பாஜக அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியது.
இந்நிலையில் நாட்டில் பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசலும் சுமார் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே பொது மக்கள் பயன்படுத்தும் சமையல் கேஸ் சிலிண்டர் 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இது மேலும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே பொது மக்கள் பயன்படுத்தும் சமையல் கேஸ் சிலிண்டர் 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இது மேலும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ஹூப்ளி - தார்வட் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ., அரவிந்த் பெல்லாடு, ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் அமைப்பினரின் நெருக்கடியால், கச்சா எண்ணெய் வினியோகத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இதன் காரணமாக தான், நாட்டில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது என்றும், விலைவாசி உயர்வுக்கான காரணங்களை புரிந்து கொள்ள வாக்காளர்கள் தற்போது முதிர்ச்சி அடைந்து உள்ளனர் எனவும் கூறியுள்ளனார்.
கடந்த ஜூலை மாத பாதியில் தான், தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றத் தொடங்கினர். ஆனால் இந்தியாவில், கடந்த மே மாதத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.