பறிக்கப்படும் பெண் சுதந்திரம் - கோரமுகம் காட்டும் தாலிபான்கள்!

Afghanistan Taliban
By Sumathi Aug 28, 2022 05:49 AM GMT
Report

பெண்கள் கல்வி கற்பதற்காக வெளிநாடுகள் செல்ல தடை விதித்து தாலிபான்கள் அரசு உத்தரவிட்டுள்ளது.

பெண் கல்வி

ஆப்கானிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக தாலிபான்கள் அரசின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், பெண்களுக்கான சுதந்திரத்தை பறித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண்கள் கார் டிரைவிங் செய்யக்கூடாது,

பறிக்கப்படும் பெண் சுதந்திரம் - கோரமுகம் காட்டும் தாலிபான்கள்! | Taliban Prohibits Female Students To Go Foriegn

பெண்கள் அரசுப் பணிகளில் வேலை செய்யக்கூடாது, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க கூடாது என பல பல்வேஉ கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பெண் குழந்தைகள் 6-ம் வகுப்புக்கு மேல் கல்வி கற்பதற்கு தாலிபான்கள் தடைவிதித்தது சர்வேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தாலிபான்கள் தடை

இந்த தடையை திரும்ப பெறக்கோரி உலக நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் தாலிபான்கள் அதை மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்பதற்கு தாலிபான்கள் தடைவிதித்துள்ளனர்.

பறிக்கப்படும் பெண் சுதந்திரம் - கோரமுகம் காட்டும் தாலிபான்கள்! | Taliban Prohibits Female Students To Go Foriegn

கல்விக்காக கஜகஸ்தான் மற்றும் கத்தார் செல்வதற்காக காபூல் விமான நிலையத்துக்கு வந்த மாணவிகளை விமானத்தில் ஏறவிடாமல் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். மாணவர்களை மட்டும் விமானத்தில் பயணிக்க அனுமதித்தனர்.