போலீஸ் தலைமையகத்தை கைப்பற்றிய தாலீபான்கள் அடிபணியும் ராணுவம்!

afghanistan taliban policestation
By Irumporai Aug 12, 2021 08:07 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானில் வேகமாக முன்னேறி வரும் தலீபான்கள் ஹெராட் போலீஸ் தலைமையகத்தை அதிரடியாக கைப்பற்றியுள்ளனர்.

இரட்டை கோபுர தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஆப்கானிஸ் தானில் கடந்த 20 ஆண்டுகளாக தலிபான்களை ஒடுக்கி வந்த அமெரிக்கா படைகளை விலக்கிக் கொண்டது.

இந்த நிலையில் தலீபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை மீண்டும் தங்களது கட்டுக்குள் கொண்டு வர ஆரம்பித்துள்ளனர். ஆப்கானில் பல்வேறு முக்கிய மாகாணங்களையும் இணைக்கும் முக்கிய சாலைகளையும் நகரங்களையும் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்

இது வரை 9 மாகாண தலைநகரங்கள்,விமான நிலையங்கள் 290க்கும் அதிகமான மாவட்டங்களில் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராட் போலீஸ் தலைமையகத்தை தலிபான்கள் அதிரடியாக கைப்பற்றியுள்ளனர்.

இதனால் ஹெராட் விமான நிலையத்தில் போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளது. கஸ்னியை கைப்பற்றியதன் மூலம் ஆப்கானிஸ்தான் தலைநகரை நாட்டின் தென் மாகாணங்களுடன் இணைக்கும் முக்கியமான நெடுஞ்சாலையை தலீபான்கள் துண்டித்துள்ளதாக   தகவல்கள் கூறுகின்றன.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வேகமாக முன்னேறி வரும் நிலையில், ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வன்முறையைக் கைவிட்டால் ஆட்சியில் பங்களிக்க தயார் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தூதரகம் அங்குள்ள தங்கள் நாட்டு மக்களை வெளியேறும்படி அவரசமாக அழைப்பு விடுத்துள்ளது.

தற்போது ஆப்கானிஸ்தானில் 10-ஆவது மாகாணத் தலைநகராக கஜினியைக் கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகள், அதன் மூலம் தலைநகா் காபூலை நெருங்கியுள்ளனா்.