பெண்கள் இனி சத்தமாக பேசவோ, பாடவோ கூடாது - புதிய சட்டம் - ஐநா கவலை!
பெண்கள் பொது வெளியில் சத்தமாக பாடுவதற்கும், பேசுவதற்கும் தடை விதித்து புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
தலிபான் ஆட்சி
கடந்த 2021 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தனர். தொடர்ந்து, பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
பெண்கள் தனியாக வெளியே நடமாடக் கூடாது, வேலைக்கு செல்லக் கூடாது, வெளியே சென்றாலும் வீட்டு ஆண்களின் துணையுடன்தான் செல்ல வேண்டும். வெளியில் செல்லும்போது முகம் உள்பட உடல் முழுவதும் மறைக்கக்கூடிய வகையில் உடை அணிந்து செல்ல வேண்டும்.
கடும் கட்டுப்பாடு
உயர்நிலைப் பள்ளிகளுக்கு மாணவிகளுக்கு அனுமதி இல்லை, தொடக்கப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியான வகுப்புகள் என கட்டுப்பாடுகள் ஏராளம். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொதுவெளியில் சத்தமாகப் பேசுவதற்கும், பாடுவதற்கும் தடை விதித்து புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
நல்லொழுக்கத்தைப் பேணும் வகையில் இந்த இஸ்லாமிய சட்டம் அமல்படுத்தப்படுகிறது என்றும், சட்டத்தை மீறினால் நடவடிக்கை எடுக்கவும் இந்த சட்டடத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
தற்போது இந்த சட்ட நடவடிக்கைகளுக்கு ஐ.நா. உள்ளிட்ட உலகில் உள்ள பல்வேறு சமூக அமைப்புகள் குரல் எழுப்பி வருகின்றனர்.