எங்களை விலங்குகள் போல நடத்துகின்றனர்... - தலிபான்களுக்கு எதிராக பெண்கள் போராட்டம்...!
நாங்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுகிறோம் என்று உயிரை பணயம் வைத்து தலிபான்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தலிபான்களுக்கு எதிராக பெண்கள் போராட்டம்
பெண்களை பல்கலைக்கழகம் படிக்க அனுமதிப்பதை தலிபான்கள் நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து, தலிபான் அரசுக்கு எதிராக பெண்கள் தங்களுடைய உயிரை பணயம் வைத்து தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில்,
பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்கப்படும் என்று தலிபான்கள் உறுதியளித்தனர். ஆனால், ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததும் தற்போது பெண்களை மிருகம் போல நடத்துகின்றனர்.
கடந்த ஆண்டு ஆட்சிக்கு தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இஸ்லாமிய சட்டத்திற்கு தங்கள் சொந்த விளக்கத்தை அமல்படுத்தி வருகின்றனர். கல்வி உள்ளிட்ட பொது வாழ்வில் பெண்களின் அடையாளத்தை துடைத்தெறிந்தனர்.
தீவிர தலிபான் ஆட்சி பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பெண் கல்வியையும் தடை செய்துள்ளது. இதேபோல், அவர்கள் பல வேலைகளில் இருந்து தடுக்கப்படுகிறார்கள். கூடுதலாக, கணுக்கால் முதல் தலை வரை ஆடைகளை அணிய பரிந்துரைக்கின்றனர். ஆண் உறவினர் இல்லாமல் பெண்கள் பயணம் செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
அதே போல், பெண்கள் பூங்காக்கள் அல்லது உடற்பயிற்சி கூடங்களுக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. நாங்கள் விலங்குகளைப் போல நடத்தப்படுகிறோம். விலங்குகள் தங்கள் விருப்பப்படி வெவ்வேறு இடங்களுக்குச் செல்லலாம். ஆனால் எங்கள் வீட்டை விட்டு நடக்க எங்களுக்கு உரிமை இல்லை என்று தெரிவித்துள்ளனர்.